விஷால் வெங்கட் இயக்கத்தில் அண்மையில் வெளியான சில நிமிடங்களில் சில மனிதர்கள் படத்தினை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற படத்தினை விஷால் வெங்கட் இயக்கி ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், அதிக விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இதில் நாசர், அசோக்செல்வன், மணிகண்டன் உட்பட பலரும் தங்களது வெளிப்படையான நடிப்பை காண்பித்துள்ளார்கள்.
இந்தப் படத்தினை ஒரு விபத்தில் சந்திக்கும் 4 இளைஞர்கள் அந்த சூழலை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை மையமாக வைத்து விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த உலக நாயகன் கமல் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.