நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கததற்கான காரணம் குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக எப்போதும் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் செயல்படும் தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வுக்கு எதிரான எந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் .
இந்த நீட்தேர்வு திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகித்த மத்திய அரசின் கூட்டணியில் தான் கொண்டு வரப்பட்டது. மாணவர்களுக்கு இழைக்கப்படும் இத்தனை அநீதிகளுக்கும் காரணம் காங்கிரஸ் தான் எனக் கூறினார். நீட்தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் பாஜகவிற்கு அதிமுக தகுந்த பதிலடி கொடுக்கும் என அவர் கூறினார். ஆனால் திமுகவை சேர்ந்த துரைமுருகன் மீண்டும் மீண்டும் ஓபிஎஸ் பொய்யை சொல்லி ஏமாற்றுகிறார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.