சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த செட்டியூரை சேர்ந்தவர் தங்கராஜ். 40 வயதாகும் இவர் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இவர் தேர்தல் பணிக்காக வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உடன் இருந்த அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தங்க ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.