நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி அனுப்பப்பட்ட தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகம் போடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே நீட் தேர்வு செல்லாது என்று நீதிமன்றத்தில் திமுக தீர்ப்பு வாங்கியதை சுட்டிக்காட்டிய துரைமுருகன், மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற ஓபிஎஸ் துடிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.