Categories
சினிமா

காதல் மாதம் கொண்டாட்டம்….. “ராதே ஷ்யாம்” படக்குழு போட்டி அறிவிப்பு… காத்திருக்கும் சூப்பர் பரிசு…!!!!

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தை கொண்டாடும் வகையில் ராதே ஷ்யாம் படக்குழுவுக்கு மடல் எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

“ராதே ஷ்யாம்” படத்தை யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திலிருந்து அண்மையில் இதயத்தை தொடும் பாடலொன்று வெளியானது. இப்பாடல் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இதயத்தை தொடும் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன்சங்கர்ராஜா பாடியிருக்கிறார். இதனுடைய இந்தி பதிப்பு கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இத்திரைப்படம் தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றன. சுமார் 400 திரையரங்குகளில் இப்படம்  வெளியாகும் என கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் “Aashiqui Aa Gayi” பாடல் இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது படக்குழு பரிசுப் போட்டிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. காதல் மாதத்தை(பிப்ரவரி) கொண்டாடும் வகையில் படக்குழுவுக்கு கடிதம் எழுதுவோருக்கு பரிசு காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப்பரிசு நடிகர் பிரபாஸை சந்திக்கும் வாய்ப்பாகக் கூட இருக்கலாம் என்ற தகவல் கசிந்திருக்கிறது.

Categories

Tech |