சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48′ என்ற சிகிச்சைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, முதல் தவணை இரண்டாம் தவணை, பூஸ்டர், இளம் சிறார்களுக்கு என நான்கு தவணையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு நம்மை காக்கும் 48′ என்ற திட்டத்தின் மூலம் 13 ஆயிரத்து 632 விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 15 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக பாதி அளவு குறைந்துள்ளது.