Categories
சினிமா

“ஒரு வேளை விவாகரத்து பண்ணிட்டா”….? உஷாரான பிரபலம் செய்த வேலை…. ரொம்ப வெவரமாதா இருக்காரு….!!!

ராஜ்குந்த்ரா பல வழக்குகளில் சிக்கியதால் தனது மனைவியான ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்துவிடுவார் என்ற பயத்தால் சொத்துக்களை சில்பாவுக்கு எழுதிவைத்துள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சில மாதத்துக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்றதாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்தார். போலீசாரின் விசாரணையின் போது இவர் ஆபாசப் படங்களை தயாரித்து மொபைல் அப்ளிகேஷன் மூலம் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிந்தது. சில மாதத்துக்கு சிறைவாசத்தை அனுபவித்து ஜாமீன் மூலம் வெளிவந்தார். ராஜ்குந்த்ரா மீது சில நடிகைகளும் புகார் அளித்ததால் அவரின் மேல் வழக்குகள் அதிகரித்தது. கணவர் ராஜ் குந்த்ரா இப்படி தவறான வேலைகளை செய்தது எனக்கு தெரியாது என்று ஷில்பா கூறினார் .

சில நாட்களுக்கு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. கணவர் ராஜ் குந்த்ராவினால் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். இதனால் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்யப் போவதாக ஷில்பா ஷெட்டி கூறியிருக்கிறார். தற்போது ராஜ்குந்த்ரா ஷில்பா ஷெட்டியின் பெயரில் 38.5 கோடி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார் . ஐந்து குடியிருப்புகளை கொண்டுள்ள பில்டிங்கை ஷில்பா ஷெட்டிக்கு எழுதிவைத்துள்ளார். இது சென்ற 21 தேதி பத்திரப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வழக்குகளில் சிக்குவதால் மனைவி ஷில்பா ஷெட்டி பிரிந்து விடக்கூடாது என்று ராஜ்குந்த்ரா இப்படி செய்து உள்ளார் என கூறப்படுகிறது.

Categories

Tech |