நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற சர்வதேச விருதுகள் பெற்றிருக்கிறார்.
இவர் மும்பை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகள் வைத்திருக்கிறார். அவர் தற்போது வசிக்கும் வீடு மட்டும் 10,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதனால் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த பிரம்மாண்டமான வீடு 418.05 சதுர மீட்டர் கொண்டது. ரியல் எஸ்டேட் வல்லுநர் ஒருவர் இது தற்போதைய மார்க்கெட் விலை தான் என்று கூறியுள்ளார்.