Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா: “அதிமுகவின் திடீர் முடிவு”…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது.

வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆலோசனை செய்வதற்காக இன்று காலை 11 மணியளவில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கிறது.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டின் சட்டசபையில் இருக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். எனினும் இக்கூட்டத்தை இதற்கு முன்பே பாஜக புறக்கணித்துவிட்டது. இந்நிலையில் அ.தி.மு.கவும் அதனை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |