Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. வீட்டை சூழ்ந்த அமெரிக்க படை… மனித வெடிகுண்டாக மாறிய ஐஎஸ் தீவிரவாத தலைவர்….!!!

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் உயிரிழந்ததாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, சிரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போது தன் குடியிருப்பைச் சுற்றி அமெரிக்க படைகள் சூழ்ந்து கொண்டதை அறிந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி தன் குடும்பத்தாரை கொன்று தானும் தற்கொலை செய்தார்.

இதுபற்றி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது. ஐஎஸ் தீவிரவாத தலைவரான அபு இப்ராஹீம் அல் ஹஷிமியை குறிவைத்து சிரிய நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்காவின் சிறப்பு படை தாக்குதல் நடத்தியதில் அவர் பலியானார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி நடத்திய தற்கொலை தாக்குதலில், சிறுவர்கள் 6 பேர் பெண்கள் 4 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |