வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள எம்.கே. பள்ளம் பகுதியில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தாங்கி கொள்ள முடியாமல் அவதிப்பட்ட முதியவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சின்னசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து திருச்செங்கோடு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சின்னசாமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.