Categories
உலக செய்திகள்

அவருகிட்ட ஏன் கொடுத்தீங்க… “புறக்கணிக்கப்பட்ட ஒலிம்பிக்”… இந்தியாவிற்கு அமெரிக்கா பாராட்டு…!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியாவிற்க்கு  அமெரிக்க செனட் வெளியுறவு குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 24 வது  குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு  நேற்று மாலை   தொடங்கிய நிலையில், 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி ,ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 ஒரு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் .

இந்தியா சார்பில் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான்  என்ற ஒரே ஒரு வீரர் மட்டும்  தகுதி பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் பிரமாண்ட தொடக்க விழாவானது பீஜிங்கில்   உள்ள பறவை கூடு ஸ்டேடியத்தில், அதாவது இந்திய நேரப்படி நேற்று  மாலை 5.30 மணிக்கு தொடங்கியது .சீனாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் முன்பே அறிவித்துள்ளது.

இந்த  சூழலில்,  2020 ஆம் ஆண்டு கல்வான்  பள்ளத்தாக்கில்  இந்தியா, சீனாவிற்கிடையே  நடந்த சண்டையில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.. இதில் காயமடைந்த சீன படையின் கமாண்டர் கியூ பபாவுக்கு ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லும் வாய்ப்பை சீனா  வழங்கியுள்ளது.

இதன் காரணமாக தொடக்க மற்றும் நிறைவு விழாவை  இந்தியா புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு டுவிட்டர் பக்கத்தில், பெய்ஜிங்  ஒலிம்பிக்கின்  இராஜதந்திர புறக்கணிப்பில் இந்தியா இணைந்ததற்காக  நாங்கள் பாராட்டுகிறோம். மனித உரிமை மீறல்களை நிராகரிக்கும் அனைத்து நாடுகளுடனும் நாங்கள் துணையாக நிற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |