உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசிய போது ; கிரிமினல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் சட்டத்தின் ஆட்சியை உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார். 21 வது நூற்றாண்டில் உத்திரபிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மட்டுமே இதனை செய்ய முடியும் எனவும் கூறினார் .
மேலும் ,ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு நெருக்கடியை மனிதர்கள் கண்டதில்லை. இத்தகைய நெருக்கடியான நிலையில் கூட இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் இரு மடங்கு பலன்களை கண்டோம் . இதையடுத்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பிய போதும், அதை புறந்தள்ளிவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் . குடும்ப ஆட்சி நடத்தும் சமாஜ்வாடியினருக்கு வாய்ப்பு கிடைத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகளும் நிறுத்தப்படும், மேலும் உங்களை பட்டினி நிலைக்கு தள்ளி விடுவார்கள் எனவும் கூறியுள்ளார் .