தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR எனப்படும் ஒருமுறை நிரந்தர கணக்கு முறையின்படி இணையதளத்தில் பதிவு செய்த தேர்வர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR முறையில் விண்ணப்பித்த தேர்வர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு இனி வரும் காலங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகு OTR சேவையின் மூலம் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சந்தேகம் எதுவும் இருந்தால் [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக முழு விபரத்தையும் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.