மாளவிகா மோகனனின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ”பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் ”மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், படங்களில் நடிப்பதில் இவர் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது இவர் மாலத்தீவில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இவரின் புகைப்படத்தை யாரோ எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்து கோபத்தில் உள்ள மாளவிகா மோகனன், இது போன்ற போலியான மற்றும் மோசமான புகைப்படத்தை கண்டால் உடனே புகார் அளிக்கவும் என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.