Categories
மாநில செய்திகள்

யூத் போல நடித்து…. இளம் பெண்ணை ஏமாற்றிய 56 வயது எஸ்ஐ …..!! பாலியல் புகார் அளித்த இளம்பெண்….!!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு பட்டம்பெற்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டித் தருமாறு காண்ட்ராக்டர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காண்ட்ராக்டர் இந்த இளம்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக இந்த இளம்பெண் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்ற உதவி ஆய்வாளரை நாடியுள்ளார். தொடர்ந்து அந்த ஆய்வாளருக்கு, இளம் பெண்ணின் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இறந்தனர் எனவே அந்த பெண் தனிமையில் தான் வாடி வருகிறார் என்பது போன்ற சில விஷயங்கள் தெரிந்து உள்ளன. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவல் ஆய்வாளர் அந்த இளம்பெண்ணிடம் உங்கள் வீட்டில் சாத்தான் புகுந்து விட்டது அதனால் தான் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன இதனால் 40 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதோடு வீட்டிற்குள்ளேயே பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி 40 நாட்கள் அந்த பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து உள்ளார். பின்னர் புனித நீர் எனக்கூறி ஏதோ ஒரு திரவத்தைக் குடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் போன்ற அனைத்தையும் காவல் ஆய்வாளர் ஏமாற்றி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் காவல் ஆய்வாளரின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணோ “இவருக்கு வயது இருக்கும் போலிருக்கிறதே நான் எப்படி திருமணம் செய்து கொள்வது என கேட்டுள்ளார்.” அதற்கு ஆண்ட்ரூசின் பெற்றோர், “இல்லை அவருக்கு 42 வயது தான் ஆகிறது வெயிலில் டியூட்டி பார்ப்பதால் இதுபோன்று முதுமையாக காட்சி அளிக்கிறார்.” எனக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு மற்றொரு வீட்டில் அவர்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்போது காவல் ஆய்வாளரின் ஆதார் கார்டு அந்த இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ளது. அதில் அவருக்கு 56 வயதாகிறது என்று திடுக்கிடும் தகவல் இளம் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அவரை பற்றி விசாரித்துள்ளார். இதில் ஆண்ட்ரூஸ் கால்ட்வெல் காவல் ஆய்வாளர் இல்லை எனவும் அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவியாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் நிலையத்தில் ஆண்ட்ரூஸ் மீதும் அதற்கு உடந்தையாக இருந்ததாக ஆண்ட்ரூசின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |