Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. கொன்று நாடகமாடிய மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மகனே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது முத்தப்பா 2 நாட்களுக்கு முன்னரே வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் முத்தப்பாவின் மகனான முரளி என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது முரளி புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி அதன் தவணை தொகையை முறையாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் நிதி நிறுவனத்தினர் அந்த மோட்டார் சைக்கிளை ஜப்தி செய்துள்ளனர்.

அந்த மோட்டார் சைக்கிளை மீட்பதற்காக முரளி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முரளி இரும்பு கம்பியால் தனது தந்தையின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துவிட்டார். அதன்பின் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக முரளி எப்போதும் போல தனது வேலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முரளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |