Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன?…. “இந்த திரைப்படத்தின் கதை வேறொருவற்கு எழுதியதா”…. இயக்குனர் அளித்த அதிரடி பேட்டி …!!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இப்படம் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்க வேண்டிய நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. எதற்கும் துணிந்தவன் படத்தில் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறுகையில்.” நடிகர் சூர்யாவிற்காக பிரம்மாண்டமான கதை ஒன்றை எழுதினேன். இப்படத்திற்காக பல மடங்கு உழைத்தேன். இந்த  கதை தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு பிடித்திருந்தது. அவர் நடிகர் சூர்யாவை கிராமத்திற்கு கூட்டி செல்வோம் என்று  இப்படத்தை அவருக்காக தேர்வு செய்தார். பின் நடிகர் சூர்யாவிடம்  எதற்கும் துணிந்தவன் கதையை கூறி படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால் இந்த கதையை  வேற ஒரு நடிகருக்காக உருவாக்கப்பட்டது” என்று பாண்டியராஜ் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |