Categories
தேசிய செய்திகள்

MBBS மாணவர் சேர்க்கையில் ஏன் தாமதம்?…. விளக்கம் கொடுத்த ஜிப்மர்….!!!!

MBBS சேர்க்கையில் தாமதம் தொடர்பாக ஜிப்மர் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் MBBS சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு முன் அறிவிப்பு இன்றி, கடைசி நேரத்தில் ஒத்தி வைத்ததால் பெற்றோர்கள், மாணவர்கள் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. MBBS கலந்தாய்வு, இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியால் கையாளப்படுகிறது.

இதையடுத்து தகுதிப் பட்டியல் ஒத்திவைப்பது, மாற்றியமைப்பது மருத்துவ கலந்தாய்வு குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனிடையில் தேர்வு செய்த மாணவர்களின் விபரங்களை ஜிப்மர் நிர்வாகத்துக்கு வழங்கிய பின்பே, சேர்க்கை நடைமுறை (அ) சான்றிதழ் சரிபார்ப்பினை  நடத்த முடியும். இந்த விபரங்கள் மருத்துவ கருத்துரை செயற்குழுவின் இணையதளமான www.mcc.nic.inல் கிடைக்கிறது. MBBS சேர்க்கை குறித்த எந்த செயலையும் ஜிப்மர் தன்னிச்சையாக நடத்த முடியாது. இது குறித்த எவ்வித குறையையும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவம் கலந்தாய்வு கமிட்டியினுடைய அறிவிப்பினை பெற்ற பின் ஜிப்மரை அணுகி கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |