இங்கிலாந்தில் பொது வெளியில் வைத்து வெறும் 16 வினாடிகள் மட்டுமே மாஸ்க்கை கழட்டிய இளைஞருக்கு காவல்துறை அதிகாரிகள் 2,00,000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக பலவித கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பொது மக்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் வசித்து வரும் கிறிஸ்டோபர் என்ற இளைஞர் ஒருவர் சாமான்கள் வாங்க BM என்ற கடைக்கு சென்றுள்ளார்.
இவர் கடைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்படுவது போல் உணர்ந்ததால் மாஸ்க்கை வெறும் 16 வினாடிகள் மட்டுமே கழட்டியுள்ளார். இவருடைய போதாத நேரம் கிறிஸ்டோபர் மாஸ்க்கை கழட்டிய பொழுது அந்தக் கடையினுள் காவல்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளார்கள்.
இதனையடுத்து போலீஸ் அந்த இளைஞனை அழைத்து மிக கடுமையாக பேசியுள்ளார்கள். அதன்பின்பு அவருடைய வீட்டிற்கு ACRO குற்றப்பதிவு அலுவலகத்திலிருந்து 100 டாலர் அபராதம் விதித்து கடிதமொன்று வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிறிஸ்டோபர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவ்வலுவலகத்திற்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இவ்வாறு இருக்க கிறிஸ்டோபருக்கு மற்றொரு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதாவது 16 வினாடிகள் மட்டுமே மாஸ்க்கை கழட்டிய கிறிஸ்டோபருக்கு 2,00,000 ரூபாய் அபராதம் விதிக்கும் படி உத்தரவிட்டு கடிதம் வந்துள்ளது.