ஜனவரி 17-ஆம் தேதி அன்று தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா அதன்பிறகு இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. இதற்கிடையே ஐஸ்வர்யாவையும் தனுஷையும் ஒன்றாக சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனுஷூடன் தான் ஐஸ்வர்யா வாழ வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம்.
எனவே ரஜினி நீ தனுஷுடன் தான் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மிரண்டு போனாராம். எனவே ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷூம் நானும் பிரியவில்லை என்று போஸ்ட் போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனுஷ் ரசிகர்கள் மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வதற்கான போஸ்ட்-ஐ எதிர்பார்த்தால் இப்படி உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதே. இதுபோன்ற சமயத்தில் துணை முக்கியம் அண்ணி என்று கூறி தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.