Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. புதிய பாடத்திட்டம் குறித்த முழு விபரம் இதோ…..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அதிகாரபூர்வ பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் குரூப் 4 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு 30 ஆகும். தற்போது டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆங்கில மொழி தேர்வு ரத்து செய்யப்பட்டு தமிழ் மொழி தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தமிழ் மொழி தேர்வில் 40 சதவிகித மதிப்பெண்களை பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இதில் 40 சதவிகித மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடையை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |