Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்போ உங்க காட்டுல பண மழைதானா மேடம்…? “சூப்பர் ஸ்டாருடன்” ஜோடி சேரும் பீஸ்ட் பட நாயகி…!!

10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால் பதித்த பூஜா ஹெக்டே அடுத்தபடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபுவுடன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முதன் முதலாக பூஜா ஹெக்டே முகமூடி படத்தில் தான் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பூஜா ஹெக்டே 10 ஆண்டுகளுக்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடிக்கும் பிஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் post-production பணி நடந்துகொண்டிருக்கும் நிலையில் பூஜா ஹெக்டே தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ஹைதராபாத்திலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனை இயக்குனர் திரிவிக்ரம் சாரிக்கா அண்ட் ஹாஸினி க்ரியேஷன் மூலம் படம்பிடிக்கவுள்ளார்.

Categories

Tech |