Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. “காதலியை சூட்கேஸில் மறைத்து விடுதிக்கு எடுத்த சென்ற மாணவன்”…. ஷாக்கான வார்டன்….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் மிகப்பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த விடுதி பாதுகாவலர் அதனை சோதனையிட முயன்றார். ஆனால் அந்த மாணவர் பேக்கை தூக்கி கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.

இதையடுத்து பாதுகாவலர் அந்த பேக்கை பறித்து சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பேக்கிற்குள் இருந்து ஒரு அழகிய பெண் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி பாதுகாவலர் அந்த மாணவரிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவர் அந்த பெண் தன்னுடைய காதலி என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

Categories

Tech |