நடிகை ஜோதிகா நடிக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் பிஸியான அவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு, 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்தார்.
மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது. “கண்ட நாள் முதல்” என்னும் திரைப்படத்தின் இயக்குனரான பிரியாவின் இயக்கத்தில், ஜோதிகா அடுத்து நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்று கூறப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.