Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த விவசாயி…. வழியில் நடந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாவிபாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிசாமி அவரது வீட்டிலுள்ள தோட்டத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லடத்தில் இருந்து உடுமலை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பழனிசாமி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |