சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிந்ததும் இந்த மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிப்பதாக நாசா திட்டமிட்டிருக்கிறது.
சர்சவதேச விண்வெளி மையம் (ISS) என்பது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி மையம் ஆகும். இது ஐந்து பங்கு விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். இந்த நிலையம் நுண்ணுயிர் மற்றும் விண்வெளி சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது. இதில் விஞ்ஞான ஆராய்ச்சி, வானிலையியல், இயற்பியல் மற்றும் பிற துறைகளில் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ISS சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால நீண்ட காலப் பயணங்களுக்குத் தேவையான விண்கல அமைப்புகள் மற்றும் உபகரணங்களைச் சோதிப்பதற்குப் பொருத்தமானது.
சர்வதேச விண்வெளி மையம் 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.மேலும் இந்த ஆய்வகம் பூமியிலிருந்து 227 கடல் மைல் தொலைவில் சுற்றி வருகின்றது. இந்த சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிந்ததும் இந்த மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிப்பதாக நாசா திட்டமிட்டிருக்கிறது. வருகின்ற 2030-ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை மூழ்கடிப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தெற்கு பசிபிக் பெருங்கடலின் மக்கள் வசிக்காத பகுதியான பாயிண்ட் நெமோ என்ற பகுதியில் சர்வதேச விண்வெளி மையத்தை மூழ்கடிக்க வைப்பதாக நாசா கூறியுள்ளது.