Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் பதற்றம்… படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ரஷ்யா தனது படைகளையும் அதிநவீன போர் கருவிகளையும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் நிலைநிறுத்தியுள்ள  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனை சற்றும் விரும்பாத உக்ரைன், மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, உக்ரைனை நோட்டா  ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

ஆனால் இதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து அந்நாட்டின்  மீது படை எடுக்கும் நோக்கில் தீவிரமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை ஒட்டிய உக்ரைன் எல்லையிலும் படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள், பீரங்கிகள், மற்றும் ஏவுகணை அமைப்பு உள்ளிட்டவற்றை ரஷ்யா  அமைத்துள்ளது.

Categories

Tech |