தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 14,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று தமிழகத்தில் 16,096-ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று மின்னல் வேகத்தில் குறைந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஒரே நாளில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,636-ஆக அதிகரித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,88,599-லிருந்து குறைந்து 1,77,999-ஆக உள்ளது. தினசரி பாதிப்பு 30,000-ஐ நெருங்கிய நிலையில் தற்போது பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.