பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் நேற்றும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றதாகவும், 5 ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும் இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.