Categories
உலக செய்திகள்

“ச்ச என்ன அழகு…?”… நம்ம பூமியா இது…? விண்வெளியில் எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படம்…!!!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியாஸ் மாரர் என்ற விண்வெளி வீரர், ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்துகொண்டு நம் பூமியை  புகைப்படம் எடுத்திருக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளி குறித்த பல பதிவுகளை அடிக்கடி வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது பூமியின் அழகை அற்புதமாக காட்டக்கூடிய வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வியக்க செய்திருக்கிறார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “மேலிருந்து பார்க்கும்போது நம் பூமி உண்மையாகவே ஒரு கலைப்படைப்பாக தெரிகிறது.

https://www.instagram.com/p/CZW9cGMMh8j/

அரேபிய தீபகற்பத்தினுடைய வண்ணமயமிகுந்த இந்த புகைப்படங்களை நான் எடுத்திருக்கிறேன். இதிலும் பாலைவனத்தில் இருக்கும் வடிவங்கள் மற்றும் கோடுகள் என்ன? என்பதை நான் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பல அழகிய வண்ணங்களில் தெரியக்கூடிய அழகான புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

Categories

Tech |