Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்..3) இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாள் என்பதாலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |