ஆவடியில் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது 68 இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர்.
அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது. நீங்கள் அங்கே சென்று அடக்கம் செய்யுங்கள் இங்கே செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரண்டு தரப்பிற்கும் சண்டை ஏற்பட்டது. பல மணி நேரம் கோபிகுமாரின் உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், ஆவடி தாசில்தார் , ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர், போலீஸ், வருவாய் துறையினர், நீல அளப்பவர். அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பின் ஆர்ச் அந்தோணியார் மயானத்தை அளந்தனர். ஜே.சி.பி மூலமாக பள்ளம் தோண்டி உடலை நல்லடக்கம் செய்தனர்.