வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,131-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் எண்ணெய் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 91 குறைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சிலிண்டர் விலை வணிக பயன்பாட்டிற்கு ரூ.2,040-க்கு விற்கப்படுகிறது.
இதனால் வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டரை பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேசமயம் வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எப்போதும் போல் ரூ.915-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.