தமிழகத்தில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த வருடமும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கோவில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திடீரென்று கட்டுப்பாடு விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.