பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், சீன நாட்டிடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்க தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அதற்காக அங்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.
அதன்பின்பு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெறுவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனா 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானுக்கு கடனாக கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி கடந்த மாதம், பாகிஸ்தான், சவுதி அரேபியாவிடம் 3 பில்லியன் டாலர் வாங்கியிருக்கிறது.