ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராம கணேசன் வீட்டுமனை விற்பனையாளர் ஆவார். இந்நிலையில் ஊரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல் கொண்டு ரூபாய் 9 கோடிக்கும் விலை பேசி உள்ளார். இவர் ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய் 1.90 கோடி வாங்கியுள்ளதாக கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு கமிஷனர் ஷங்கர்கஜிவால் ஆணையிட்டார். கூடுதல் கமிஷ்னர் தேன்மொழி தலைமையில் உதவி கமிஷ்னர் ஜான்விக்டர் மற்றம் இன்ஸ்பெக்டர் மோகனா தலைமையில் காவலர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரியல் எஸ்ட்டேட் செய்யும் ராம கணேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.