இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் மாலத்தீவில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அமலுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அண்டை நாடான மாலத்தீவும், இந்தியாவும் நல்லுறவுவை கொண்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலையீட்டால் மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் அந்நாட்டில் “இந்தியா அவுட்” என்ற டி-ஷர்ட் அணிந்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இதுபோன்ற போராட்டங்கள் பலவீனப்படுத்தி வருவதாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் 6 மாதம் சிறை என்ற புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.