Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிம்மதியா கோவிலுக்கு போக முடியல…. 3 கார் கண்ணாடி உடைப்பு…. அதிர்ச்சியில் பக்தர்கள்….!!

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அம்மாவசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஜே.ஜே காரில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் யாரோ ஹரிகிருஷ்ணனின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

இதேபோல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு 15 ஆயிரம் ரூபாய் பணமும், செல்போனும் திருடுபோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 10 வடமாநில நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |