நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய மகனின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால், கிரிக்கெட் தான் எதிர்காலம் என்று இருந்த அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்குள் வந்தார். தொடக்க காலத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வெற்றிப் படங்களை தந்து இருக்கிறார். நடிப்பை தவிர்த்து இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப்ஐஆர் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் படங்களை தயாரித்துள்ளார்.
2018 ஆம் வருடம் தனது முதல் மனைவியான ரஜினியை பிரிந்து இரண்டாவதாக ஜுவாலா கட்டா என்பவரை மணந்துகொண்டார். விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் பிறந்த மகனான ஆரியனின் பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் .அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.