பிரபல நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும், முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தியை திருமணம் செய்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால் ஸ்ரீதேவியை மனைவியாக அறிவிக்க மறுத்துவிட்டார். எனவே, ஸ்ரீதேவி அவரைப் பிரிந்து பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
https://www.instagram.com/p/CZYjyw7Be7G/
இத்தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன், ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார்.