அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் உருவான மின்னல் உலகிலேயே மிகவும் நீளமான மின்னல் என்று சாதனை படைத்திருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஏப்ரல் மாதத்தின் போது 770 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மின்னல் உருவானது. இந்த மின்னலானது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருந்து கொலம்பஸ் நகரம் வரைக்கும் இருக்கும் தூரத்தை உள்ளடக்கியிருந்தது என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த சாதனைக்கு முன்பு கடந்த 2018 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதியன்று பிரேசிலின் தெற்குப் பகுதியில் உருவான மின்னல் மிக நீளமான மின்னலாக இருந்தது. அதைவிட இந்த மின்னல் 60 கிலோமீட்டர் அதிகமாக பரவி சாதனை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.