இரவு நேரத்தில் புலி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஒரு புலி இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளது. இந்த புலியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் புலியின் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலிகள் நடமாடும் பகுதி என்று அறிவிப்பு பலகை வைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.