Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றபோது… குடும்பத்தோடு மரணம்… 4 பேரின் உடல் அடக்கம் எங்கு தெரியுமா?

கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்வது பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா – கனடா  எல்லை பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று உயிரிழந்த நிலையில்  நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள்  இந்தியாவில்  உள்ள  குஜராத்  பகுதியை சேர்ந்தவர்கள்  என  தெரியவந்துள்ளது.

குஜராத்தில் திங்குச்சா  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல்(வயது 35)  , இவரது மனைவி வைஷாலி (வயது 33), மற்றும்  இரண்டு  குழந்தைகள்  விஹாங்கி(வயது 12)   தர்மிக் (வயது 3) ஆவர். இவர்களுக்கு  அமெரிக்காவிற்கு  செல்லும்  கனவு இருந்துள்ளதாக  கூறப்படுகிறது . அதற்காக சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட போது  உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்  அவர்கள்  குடும்பத்தினர்  இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு  கொண்டு வர வேண்டாம்  என  தீர்மானித்துள்ளனர். இதனால்  அவர்களது உடல்கள்  தற்போது  வின்னிபெக்கிலேயே அடக்கம்  செய்ய படுவதாக  தகவல்  வெளியாகியுள்ளது . அங்கு  அவர்களின்  உறவினர்கள்  யாரும் இல்லாததால் எந்த ஒரு இறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்  இது   தொடர்பான இறுதி  முடிவை  இந்திய  உயர் ஸ்தானிகராலயம்  எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே   உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்காக gofundme  இணையதள பக்கம் மூலம் ரூபாய்  70,000  நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |