Categories
தேசிய செய்திகள்

மக்களே 11 மணிக்கு ரெடியா இருங்க…. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று தாக்கலாகும் பட்ஜெட்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி வாக்காளர்களை கவரும் சில அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு அதிகரிக்கப்படுமா..?வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா…? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் எழுந்துள்ளன. மூலதன செலவினங்களை அதிகரிப்பதன் மூலமாக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டிய நிலை இருப்பதால், உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சுகாதாரம், வேலை வாய்ப்புகளை உருவாக்கி மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டிய அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. இது இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. மேலும் வளர்ச்சியை மையமாக கொண்டுள்ள பட்ஜெட் என்பதால் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |