ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு போடப்பட்ட விதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. இந்த ஹாங்காங்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மிகக்கடுமையான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா விதிமுறையை மீறி ஹாங்காங்கின் உள்துறை மந்திரியான காஸ்பர் கடந்த மாதம் 3 ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மந்திரி உட்பட யாருமே சமூக இடைவெளி, முக கவசம் போன்ற எந்தக் ஒரு கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் உள்துறை மந்திரியான காஸ்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.