மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் இந்த திட்டமானது விவசாயிகளுக்கு அவர்களின் முதுமை காலத்தில் மிகவும் பயனளிப்பதாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் முதிர்வு காலத்தில் நிலையான ஓய்வூதியத்தை பெற முடியும். இதில் 60 வயதை கடந்த விவசாயி மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூபாய் 3000 பெறலாம்.
இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் சேரலாம். இதில் பயன்பெறும் விவசாயி 29 வயது உடையவர் எனில் அவர் மாதம்தோறும் 100 ரூபாயை செலுத்த வேண்டு.ம் இதோடு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கும் இதனையடுத்து பயனாளி 60 வயதை அடையும் போது மாதம்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியத் தொகையாக கிடைக்கும். இந்த திட்டத்தின் பலன்கள் 20 வருடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.