ஹரியானாவில் உள்ள குருகிராம் அருகே தவுரு என்ற இடத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விரைவு சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் அந்த சிறுத்தைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தை வேட்டையாடி உணவு உண்ண முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.