கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இன்று புதிதாக 19 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,45,220-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,056 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 1,98,130 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.