Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு புத்திசாலித்தனம்!”…. இப்படி யாருமே செஞ்சிருக்க மாட்டாங்க…. அசால்ட்டா வேலை வாங்கிய நபர்…!!!

பிரிட்டனில் ஒரு இளைஞர் வித்தியாசமான முறையில் விண்ணப்பித்து பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

பிரிட்டனில் இருக்கும் யார்க்சையர் பகுதியின் இன்ஸ்டன்ட்பிரின்ட் என்ற பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிக்கு இடம் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு சுமார் 140 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. எனவே நிறுவனம், தகுதியுடைய நபரை தேர்ந்தெடுப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது.

இதில் ஜோநாதன் ஸ்விஃப்ட் என்ற 24 வயது இளைஞர் மார்க்கெட்டிங் பணி என்பதால் ஆக்கபூர்வமான முறையில் விண்ணப்பிப்போம் என்று நினைத்திருக்கிறார். உடனே, அந்த நிறுவனத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் நின்ற வாகனங்களில் தன் விண்ணப்பங்களை பறக்கவிட்டுள்ளார்.

இது அலுவலக அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. உடனே காவலாளியிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டிருக்கிறார்கள். அதன்பின், அந்த நபர் வித்தியாசமான முறையில் விண்ணப்பத்தை தெரியப்படுத்துகிறார் என்பதை புரிந்து கொண்டனர். இதுபோன்ற வித்தியாசமான சிந்தனையுடைய ஆள் தான் நம் பணிக்கு தேவை என்று நினைத்த அதிகாரிகள்  உடனடியாக அவருக்கு பணியை கொடுத்து விட்டார்கள்.

Categories

Tech |